Saturday, 10 July 2021

புனித ஃபெலிசித்தா, அவரது ஏழு மகன்கள்

  

        புனித ஃபெலித்தா மற்றும் அவரது ஏழு மகன்களும் உரோமையில் வாழ்ந்தனர். ஃபெலித்தா தான் கிறிஸ்தவர் என்பதில் பெருமை கொண்டு கனிவின் வார்த்தைகளால் அனைவரையும் அன்பு செய்தார். தனது 7 பிள்ளைகளுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்து கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்த்தினார். கிறிஸ்துவை மீட்பராகவும், ஆரசராகவும் ஏற்று கிறிஸ்தவ வாழ்வுக்கு சான்று பகர்ந்த ஃபெலித்தா, அவரது 7 மகன்களும் வேதவிரோதிகள் கைது செய்து சிறையில் அடைத்து கிறிஸ்துவை மறுதலிக்க துன்புறுத்தினர். 


       கிறிஸ்துவின் பொருட்டு துன்பங்களை மகிழ்வுடன் ஏற்ற ஃபெலிசித்தா தனது ஏழு மகன்களிடம், “பிள்ளைகளே! வானத்தை அண்ணார்ந்து பாருங்கள். இயேசு உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். அவரின் அன்பில் நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் ஆன்மாவைக் காத்துக்கொள்ள உறுதியுடன் போராடுங்கள்” என்றார். 165ஆம் ஆண்டு ஃபெலிசித்த அவரது மகன்களை கசையால் அடித்தும், தடியால் அடித்தும், தலைவெட்டியும் கொலை செய்தனர்.   

No comments:

Post a Comment