Saturday, 10 November 2018
இதோ நம் தாய்!
குழந்தைப்பருவத்தில் தனது பெற்றோரை இழந்த இரண்டாம் ஜான்பால் தனிமை ஆனார். நெஞ்சோடு அரவணைக்க அன்னையின்றி அனாதையானனர். நல் வாழ்விற்கு வழிகாட்ட த் தந்தையின்றி தனிமரமானார். நண்பனாக உறவாடும் சகோதரனை இழந்து கண்கலங்கினார். இத்தருணத்தில் இறைவனை மட்டுமே நம்பி வாழ்ந்தார். தனிமையில் வாழ்ந்த தருணத்தில் அளவில்லாமல் துன்பமடைந்தார். துன்பத்திலும் தனிமையிலும் இறைவனோடு இணைந்து நடந்தார்.
வாழ்நாள் முழுவதும் அன்னை மரியாவின் துணையை நடினார். தனது பெற்றோரையும் சகோதரனையும் இழந்த நேரம்முதல் அன்னை மரியாவிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். அன்னை மரியாவை தன் தாயாகவும், இறைவனை தந்தையாகவும் ஏற்றுக்கொண்டார். அன்னை மரியாவிடமிருந்து தாழ்ச்சி, எளிமை, இறைநம்பிக்கை, இறைவார்த்தையை வாழ்வாக்குதல், மற்றும் இறையன்பிலும், சகோதர அன்பிலும் வளர்ந்துவர கற்றுக்கொண்டார்.
“இதோ உம் தாய்!” என்ற இயேசுவின் வார்த்தைகள் தனக்காகவே ஏற்றுக்கொண்டார். அன்னை மரியாவிடம் தன்வாழ்வை தனது பணிகளையும் அர்ப்பணித்தார். அன்னையின் அருள் பெற்று அவரின் வழிகாட்டுதலில் நடந்தார். இவ்வுலகம் தராமுடியாத இறைவனின் அன்பைச் சுவைத்தார். அன்னை மரியாவை அம்மா என்று அழைத்து தாயின் பாசத்தையும் பாதுகாப்பையும் அரவணைப்பையும் பெற்றுக்கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment