லூயிஸ் 9 வயதாக இருக்கும்போதே, இவரின் தாத்தா இறந்துவிட்டார். இதனால் இவரின் தந்தை 8 ஆம் லூயிஸ் அரச பதவியேற்றார். 8 ஆம் லூயிசை பதவியேற்ற 3 ஆண்டுகளில் கொள்ளை நோயால் தாக்கப்பட்டு இறந்துவிட்டார். அதனால் லூயிஸ் தனது 12 வயதிலேயே நாட்டின் அரசராக பதவியேற்றார். ஒன்பதாம் லூயிஸ் என்று பெயர் பெற்றார். லூயிஸ் புகழ் பெற்ற போர்வீரர். இவர் தனது 19ஆம் வயதில் மார்க்கிரேட் எனற பெண்ணை திருமணம் செய்தார். 5மகன்களும், 6மகள்களுக்கும் தந்தையானார். தவப் பற்றிலும், செப ஆர்வத்திலும், ஏழை எளியவர் மீது கொண்ட அன்பிலும் சிறந்து விளங்கினார். தன் நாட்டு மக்களின் ஆன்மீக நலத்திலும் அவர்களிடையே அமைதியை உருவாக்குவதிலும் அக்கறைகொண்டு, ஆட்சி செய்தார். 1248ஆம் ஆண்டு நடந்த சிலுவைப் போரில் பங்கேற்றார். கிறிஸ்தவ மக்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார். கிறிஸ்துவின் விழுமியங்ளில் வாழ்ந்த லூயிஸ் மன்சோரா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இறைவேண்டுதல் செய்து இறைவல்லமை பெற்று விடுதலையானார். அமைதிக்காக உழைத்த லூயிஸ் தனது இரக்கம், அன்பு, தாழ்ச்சி, ஏழைகள் மீது பற்றுகொண்டு வாழ்ந்தார். நோயாளிகளுக்கு மருத்துவ மனைகள் கட்டிக்கொடுத்தார். நீதியின் வழியில் பயணம் செய்த லூயிஸ் 1270ஆம் ஆண்டு இறந்தார்.
Saturday, 25 August 2018
புனித ஒன்பதாம் லூயிஸ்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment