இறைவனோடு இணைந்து திருச்சபையை அன்பு செய்தவர். கிறிஸ்தவ மக்களை துன்பங்களிலிருந்து விடுவித்தவர். தன்மீது குற்றம் சுமத்தியவர்களை பொறுமையுடன் அன்பு செய்தவர். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும் பற்றும் கொண்டு அன்பும் அரவணைப்பும் பெற்று வாழ்ந்தவரே அலெக்ஸôந்திரியா நகர் புனித சிரில். இவர் 376ஆம் ஆண்டு எகிப்து நாட்டில் அலெக்ஸôந்திரியா நகரில் பிறந்தார். இறைபக்தியில் சிறந்து கல்வி கற்று இறைஞானம் மிகுந்தவராக மாறினார். இறையியலை நன்கு கற்று குருவாக அருள்பொழிவு பெற்றார். சிரில், “வெவ்வேறான மெழுகுத் துண்டுகள் இரண்டை எடுத்து ஒட்ட வைக்கும்போது ஒன்றாகி விடுகிறதன்றோ? அவ்வாறே தேவநற்கருணை விருந்தில் பங்கேற்கும் ஒருவர் கிறிஸ்துவுடன் ஒன்றாகிறார். கிறிஸ்து அவருடனும், அவர் கிறிஸ்துவடனும் இணைந்து விடுகின்றார்” என்று கூறினார். திருச்சபையில் நிலவிய தப்பறைகளுக்கு எதிராக குரல்கொடுத்தார். 444ஆம் ஆண்டு ஜøன் 27ஆம் நாள் இறந்தார்.
No comments:
Post a Comment