கிறிஸ்துவின் மதிப்பீடுகளில் வளர்ந்தவர். இறைபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். சிறிவயதிலேயே தந்தையை இழந்து தவித்தவேளையில் இறைவனிடமிருந்து தந்தைக்குரிய பாசத்தையும் அன்பையும் பெற்றுக்கொண்டு இறைஞானத்தில் வளர்ந்தார். நாளும் இறைவார்த்தையை வாசித்து வாழ்வாக்கியவர். நற்செயல்கள் செய்து இறைவனை மாட்சிமைப்படுத்தி வாழ்ந்தவரே புனித பிரின்டிசி லாரன்ஸ். இவர் நேப்பிள்ஸில் பிரின்டிசி என்னும் நகரில் பிறந்தார். பிரின்டிசி லாரன்ஸ் இவரது இயற்பெயர் ஜøலியஸ் சீசிர் என்பதாகும். ஜøலியஸ் நாளும் இறைபக்தியில் வளர்ந்து வந்தார். கல்வி கற்பதில் சிறந்து விளங்கினார். இறைவனுக்கு தனது வாழ்வை அர்ப்பணம் செய்ய தனது 16ஆம் வயதில் 1575ஆம் ஆண்டு வெரோனாவில் உள்ள கப்புச்சின் சபையில் சேர்ந்தார். தனது பெயரை லாரன்ஸ் என்று மாற்றிக்கொண்டார். இறைவனின் மார்பில் சாய்ந்து அன்புடன் பேசினார். தன் வாழ்வில் சந்தித்த துன்பங்கள் அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணம் செய்து வாழ்ந்தார். லாரன்ஸ் தனது உயர்கல்வியை பதுவா சென்று மெய்யியல் மற்றும் இறையியல் பயின்றார். ஐரோப்பிய மொழிகளை கற்று விவிலியத்தை மொழிப்பெயர்த்தார். தனது மறையுரை வாயிலாக விவிலியத்தை மக்களுக்கு விளக்கிக் கொடுத்தார். கிறிஸ்துவின் நிலைவாழ்வுதரும் வார்த்தைகள் மக்கள் இதயங்களில் செழித்து வளர அயரது உழைத்தார். 1596ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார். சபைத் தலைமைத் தந்தையின் ஆலோசகராக நியமனம் பெற்று சிறந்த முûறியில் பணியாற்றினார். எதிரிகளால் நேரிட்ட துன்பங்களை திருச்சிலுவையின் சக்தியால் வென்றார். திருத்தந்தையின் தூதுவராக பவாரியா அரசவையில் பணியாற்றினார். இறைவனுக்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்து வாழ்ந்த லாரன்ஸ் 1619ஆம் ஆண்டு தனது பிறந்த நாளான ஜøலை 22ஆம் நாள் இறந்தார்.
No comments:
Post a Comment