Sunday, 16 September 2018

புனித சிப்ரியன்


     தனது உடமைகளை ஏழை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தவர். அறிவும், இறைஞானமும், திறமைகள் பல பெற்றவர். கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டு இறையாட்சி பணி செய்தவரே புனித சிப்ரியன். இவர் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடக்கு ஆப்பிரிக்காவில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார். இவர் 248ஆம் ஆண்டில் திருமுழுக்கு வழியாக கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டார். கிறிஸ்துவுக்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்தார். தனது உடமைகளை விற்று ஏழைகளுக்கு கொடுத்து கிறிஸ்துவின் ஏழ்மையில் பங்கு சேர்ந்தார். பேரரசர் தீசியுஸ் கிறிஸ்தவ மக்களை துற்புறுத்தி கிறிஸ்துவை மறுதலிக்க கட்டயப்படுத்தினார். சிலர் பேரரசரின் துன்புறுத்தலுக்கு உள்ளானர். சிப்ரியன் இறைவனின் தூண்டுதலால் தப்பி ஒடி தலைமறைவானார். மறைவாக வாழ்ந்த தருணத்தில் உரோமை மறைமாவட்ட குரு நொவேற்றஸ் என்பவரால் திருத்தொண்டராகத் திருப்பொழிவு பெற்றார். 251 இல் கார்த்தேஜியின் ஆயராக அருள்பொழிவு பொற்றார். முதலாம் வலேரியன் 256இல் பேரரசரானான். வலேரியன் சிலைகளுக்கு பலியிடுமாறு வற்புறுத்தினான். சிப்ரியன் கிறிஸ்துவை மறுதலிக்கு சிலைகளுக்கு பலியிடமாட்டேன் என்று கூறினார். ஆத்திரம் அடைந்த வலேரியன் கரூபிஸ் என்ற இடத்திற்கு நாடு கடத்தினார். 258ஆம் மீண்டும் சிலைகளுக்கு பலியிட கூறினார். சிப்ரியன் மறுதலித்தபோது மரண தண்டணை அளித்து 258ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் மறைசாட்டியாக இறந்தார். 

No comments:

Post a Comment