குழந்தைப்பருவம் இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து வாழ்ந்தவர். செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் ஏழ்மையை விரும்பியவர். குழந்தை இயேசுவிடம் அதிக அன்பும் பற்றும் கொண்டவர். அன்னை மரியாவை தனது தாயாக ஏற்றுக்கொண்டு இறையன்பின் நிறைவில் வாழ்ந்தவரே புல்சியானோ நகர் புனித ஆக்னஸ். இவர் இத்தாலி நாட்டில் மோன்ட்ரே புல்சியானோ என்ற இடத்தில் 1268ஆம் ஆண்டு பிறந்தார்.
ஆக்னஸ் தனது ஆறாம் வயதில் துறவு மடம் செல்ல விரும்பினார். அருகிலுள்ள துறவு மடத்திற்கு அடிக்கடி சென்று வந்தார். அவர் பிறந்தபொழுது அப்பகுதியில் அற்புதமான ஒளி சூழ்ந்தது. தனது தூய்மையான வாழ்க்கையால் தீமைகளை தூயதாக மாற்றினார். தனது ஒன்பதாம் வயதில் பிரான்சிஸ்கன் துறவு மடத்தில் சேரந்தார். உலக இன்பங்களையும் வசதியாகன வாழ்க்கை முறைகளை துறந்து ஏழ்மையை பின்பற்றினார். சாக்கு உடை அணிந்து தவம் மேற்கொண்டார். அன்னை மரியாவிடம் தன்னை அர்ப்பணம் செய்தார்.
ஆக்னஸ் அன்னை மரியாவின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார். தனது இன்பத்துன்பங்களை அவரோடு பகர்ந்து கொண்டார். ஒருமுறை அன்னை மரியா குழந்தை இயேசுவுடன் காட்சி கொடுத்தார். அத்தருணம் குழந்தை இயேசுவை ஆக்னஸ் கொடுத்தார். தனது 17ஆம் வயதில் புல்சியானோ நகரில் இருந்த துறவு மடத்தின் பெறுப்பு ஏற்று துறவிகளை சிறந்த முறையில் வழிநடத்தினார். பணியாளர்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டபோது அற்புதமான முறையில் உணவு பலுக செய்தார். இறைவனின் வழிகாட்டுதலால் பிரான்சிஸ்கன் துறவு மடத்திலிருந்து வெளியேறி 1306ஆம் ஆண்டு புதிய துறவு சபையை தோற்றுவித்தார். தியானம், தவ வாழ்விற்கு முக்கியத்தும் கொடுத்தார். அன்னை மரியாவின் கரம் பிடித்து இறையன்பில் வளர்ந்து, நோயுற்றோரை நலமாக்கிய ஆக்னஸ் 1317ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 20ஆம் நாள் இறந்தார்.
No comments:
Post a Comment