புனிதர் அனைவரின் பெருவிழா
மனித
வாழ்விற்கான அழைப்பு தூய வாழ்விற்கான அழைப்பு
ஆகும். ஒரு
நல்ல மனிதன்
மெய்யாகவே புனிதனாக
இருக்கிறான். இறைநம்பிக்கை, மனித வாழ்வைப் புனித
வாழ்வாக மாற்றுகிறது.
தந்தையாம் கடவுளின்
மாட்சியை தரணிக்குத்
தந்த ஒரே
மகனாம் இயேசுவை
அறிந்து, அனுபவித்து,
வாழ்வாக்கி, சான்று பகர்ந்து வாழ்வது தான்
புனித வாழ்வு
ஆகும்.
புனிதர்
என்றால் பாவங்களிருந்து
விலக்கப்பட்டு, கடவுளின் அருட்பொழிவு பெற்றவர் ஆவார். புனிதர்கள்
ஆண்டவரும் மீட்பருமான
இயேசு கிறிஸ்துவின்
வாழ்க்கைச் சுவடுகளில் நடந்தவர்கள். இருளிலும் துயரிலும்,
பலவீனங்களில் வீழ்ந்தும் எழுந்தும், காடு மேடு,
பள்ளங்களைக் கடந்தும், கிறிஸ்துவின் ஒளியாக வாழ்ந்தவர்கள்.
ஒவ்வொரு நாளும்
கிறிஸ்துவுக்கு நற்சான்று நல்கியவர்கள். புனிதர்கள் இவ்வுலகில்
நம்மை விட்டு
மறைந்தாலும், நம் அகவாழ்வில் மறையாமல் நம்மிடையே
அருள்மாரி பொழிகின்றவர்கள்.
புனித
செசிலியா, கிறிஸ்துவின் வீரர்களே! எழுவீர் இரவுக்கு
உரிய செயல்களை
விட்டுவிடுங்கள். ஒளியின் போராயுதத்தை அணிந்து கொள்ளுங்கள்
என்று வீரமுழக்கம்
செய்து இறுதிவரை
இறைவனுக்காக வாழ்ந்தவரே புனித செசிலியா. புனித ஜோசப் குப்பெர்டினோ,“கடவுளை அன்பு
செய்; கடவுளின்
அன்பு ஒருவரிடம்
ஆட்சி செய்யுமானால்
அவரே உண்மையானச்
செல்வந்தர்” என்று வாழ்க்கை
அனுபவத்தால் மொழிந்தவர். ஆக்னஸ் “உனது வாளினால்
என் இரத்தக்கறை
படிந்தாலும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணமான எனது உடலை
கறைப்படுத்த முடியாது” என்றார்.
பிரான்சிஸ்
அசிசி, “நான்
பாவத்தில் வாழ்ந்திருக்கையில்
தொழுநோயாளிகளைப் பார்க்க எனக்கு மிகவும் அருவருப்பாக,
கசப்பாக இருந்தது.
ஆனால் ஆண்டவர்
என்னை அவர்களிடையே
அழைத்துச் சென்றார்.
ஒரு சமயம்
கசப்பாக இருந்த
எனக்கு இப்போது
ஆன்மாவுக்கும், உடலுக்கும் இனிமையாக இருக்கிறது. இதற்குப்
பின் விரைவிலேயே
நான் இவ்வுலகைத்
துறந்தேன்” என்று கூறினார். புனித
யோவான் பெர்க்மான்ஸ்,
“நாம் ஏழைகளுக்குக்
கொடுக்கும்போது கிறிஸ்துவுக்கே கொடுக்கிறோம்.
கிறிஸ்துவின் அன்பு எம்மை ஆட்கொள்கிறது. இளைஞராக
இருக்கும் போது
புனிதராக மாறவில்லை
என்றால் நான்
ஒருபோதும் புனிதராகிட
முடியாது” என்றார்.
No comments:
Post a Comment